இன்பத்துப்பால் - வள்ளுவன் காட்டும் காதலும் காதலர்களும்

 காதற்தலைவா வள்ளுவா..!


தமிழ்ப் புலவர்கள் பலர் இருக்கிறாங்க. அவங்கள்ல நமக்கு யாரைத் தெரியுதோ இல்லையோ ஆனால் இவரைக் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். இந்த நூற்றாண்டைச் சேர்ந்த இளைஞர்கள் அறிவுரை சொல்லுற பெரியவங்களுக்கு ‘பூமர்’னு ஒரு பேர் வச்சிருக்காங்க. இவரையும் அப்படி ஒரு பூமராத்தான் பதின் பருவத்துல இருக்கிற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். தலைப்பை பார்க்கும் போதே நான் யாரை பத்தி சொல்ல வர்றேன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். திருக்குறள்-ங்கிற ஒப்பற்ற உலகப்புகழ்பெற்ற ‘தமிழ்மறை’யை எழுதின வள்ளுவரைப் பற்றித்தான் சொல்ல வர்றேன்.


ஏறக்குறைய இரண்டாம் வகுப்புல இருந்து தமிழ்ப்புத்தகத்துல தவறாம இடம்பெறும் ஒரு செய்யுள்னா அது திருக்குறள் தான். திருக்குறளுக்கோ திருவள்ளுவருக்கோ நான் அறிமுகம் சொல்லணும்ங்கிற அவசியம் இல்லை. எல்லாருக்கும் ஏகத்துக்கும் இரண்டு பேரையும் பற்றி தெரிஞ்சிருக்கும். அப்புறம் வேற எதைப் பத்தி நீ சொல்லப் போறன்னு நீங்க கேட்கலாம். சொல்றேன். என்னைப் பொறுத்த வரைக்கும் பதின் பருவத்துல இருக்கிற எல்லாருக்கும் ரொம்பவும் பிடிச்ச ஒரு புலவரா இருந்திருக்க வேண்டிய ஒருத்தர் திருவள்ளுவர். ஆனால் பள்ளிக்கூடத்துல திருக்குறளை மனப்பாடம் பண்ணி பண்ணி வள்ளுவரையும் திருக்குறளையும் கண்டாலே வெறுக்கிறாங்க. அவங்க வெறுக்கிறதுக்கு ஒரே காரணம் பாடப் புத்தகத்தில அறத்துப்பால், பொருட்பால் இரண்டிலயும் இருக்கிற அதிகாரங்களை மட்டும் வச்சிருக்கிறதுதான். நமக்கு பிடிச்ச சாப்பாட்டு வகைகளை எல்லாம் நாமாகவே தேடித்தேடி அதிகமா சாப்பிட்டிருவோம். அதெல்லாம் ஜீரணமாகனும்னா கடைசியில கசப்பான மருந்து குடிச்சுத்தான் ஆகணும். அதனால பள்ளிக்கூடத்துல மாணவர்களுக்கு மருந்தா முதல் இரண்டு பால்-ல இருக்கிற அதிகாரங்களை மட்டும் பாடமா வச்சிருக்காங்க.


‘இன்பத்துப்பால்’னு ஒரு பிரிவு இருக்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ஆனா நாம யாருமே அதில உள்ள குறள்களை படிச்சிருக்கமாட்டோம். படிச்சிருந்தா எனக்கு தெரியுற மாதிரியே சிறந்த காதல் கவிஞரா உங்களுக்கும் வள்ளுவர் தெரிஞ்சிருப்பார். நாம கேட்டு ரசிக்கிற பல காதல் சினிமா பாடல்களோட உட்கருத்த பாடலாசிரியர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி எழுதப்பட்ட திருக்குறள்-ல இருந்து எடுத்திருக்கிறத இன்பத்துப்பால்-ல உள்ள குறள்களை படிக்கும்போது தெரியவரும்.


இப்ப நான் என்ன பண்ண போறேன்னா நீங்க படிக்க, ரசிக்க மறந்த; நான் படிச்சு மெய்மறந்த சிறந்த காதல் குறள்களை இந்த ‘இன்பத்துப்பால் - வள்ளுவன் காட்டும் காதலும் காதலர்களும்’ல எழுதப் போறேன். இதுல வரப்போற கட்டுரைகளை படிக்கும்போதே இதெல்லாம் வள்ளுவர் எழுதுனதான்னு ஆச்சரியப்படப்போறீங்க. அப்புறம் என்ன? என்னை மாதிரியே வள்ளுவர் உங்களுக்கும் விருப்பமான காதல் கவிஞராகவும், காதற்தலைவராகவும் மாறிடுவார்ங்கிறதுல எந்த சந்தேகமும் இல்லை.


வாழ்க தமிழ்..!

வெல்க தமிழ்..!



கருத்துகள்

  1. அருமையாக உள்ளது தோழா!
    நீ சொல்லும் இன்பத்துப் பாலில் எங்களுக்கு இன்பம் பொங்கும் என்பதில் ஐயமில்லை🙏☺️😘
    அப்பாலை பருக ஆவலாக இருக்கிறோம் தோழர்
    ☺️☺️😘

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகான மனிதர்கள்

காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும்..!

அவள் முழுமையான அழகி..! டாட்.