இடுகைகள்

புதுக்கவிதை வடிவில் திருக்குறள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலியின் சண்டை

படம்
புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 05 குறள் எண் - 1314 யாரினும் - யாவரினும்; காதலம் - காதலை உடையவராய் இருக்கின்றோம்; ஊடினாள் - ஊடல் கொண்டாள் இன்பத்துப்பால்: கற்பியல், அதிகாரம் 132, புலவி நுணுக்கம் யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்றுஎன்று பொழிப்பு (மு வரதராசன்): யாரையும்விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக, யாரைவிட? யாரைவிட? என்று கேட்டு ஊடல் கொண்டாள். காத(லியின்)ல் சண்டை என் காதலியின் சண்டைகள் ஏகத்துக்கும் வித்தியாசமானவைகள் என்னவென்று சொல்ல? - ஒரு நாள் எல்லாரையும் விட நாம் இருவரும் எத்தனை அதிகமாய் காதலிக்கிறோம் என்றேன், யார் யாரையெல்லாம் விட என்று கேட்டு சண்டையிட்டாள் என்னைத் தவிரவும் நேசித்திருக்கிறாயோ? என்ற அர்த்தத்தில்... இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!

மறந்துவிடு மனமே

படம்
புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 05 குறள் எண் - 1242 இன்பத்துப்பால்: கற்பியல், அதிகாரம் 125, நெஞ்சொடு கிளத்தல் இலர் - இல்லாதார்; நோவது - வருந்துவது; பேதைமை - அறியாமை; வாழி - வாழ்வாயாக காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழிஎன் நெஞ்சு பொழிப்பு (மு வரதராசன்): என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவதும் உன் அறியாமையே. மறந்துவிடு மனமே காதல் அவளிடம் கடுகளவும் இல்லை - உன்னை அகன்ற அவளை எண்ணி அணுவளவும் நோகாதே அறிவுகொள் நீ மனமே! அவள் வரப்போவதில்லை மறப்பாயாக நீ மனமே! முழுதாய் உன்னில் நிறைந்தவளை… இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!

காதல் போதை

படம்
  புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 04 குறள் எண் - 1281 இன்பத்துப்பால்: கற்பியல், அதிகாரம் 129, புணர்ச்சிவிதும்பல் உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு பொழிப்பு (மு வரதராசன்): நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகைத் தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு. காதல் போதை நங்கை நின்னை  நினைக்கையில் கிடைக்கும் களிப்பும் நின் திருமுகம் கண்ட  நொடியில் நான் கொள்ளும் மகிழ்ச்சியும் நம் காதலைத் தவிர எந்த போதையும் தராதவை..! இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!

உயிர் தரும் கனவு

படம்
  புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 03 குறள் எண் - 1213 இன்பத்துப்பால்: கற்பியல், அதிகாரம் 122, கனவுநிலை உரைத்தல் நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர். பொழிப்பு (மு வரதராசன்): நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால் தான், என் உயிரும் இன்னமும் போகாமல் இருக்கின்றது. உயிர் தரும் கனவு காணாத்தூரம் எனைவிட்டு கண்ணே நீ சென்றபோதும் தொலைந்த இரவுகளில் சிலநாள் தூக்கத்தில் வருமென் கனவினில் மிகஅருகினில் காதலி நீ வாழ்கிறாய் அதனால் நானும் இங்கே அன்பே உயிரோடு இருக்கிறேன்..! இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!

அவளது பார்வை

படம்
புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 02 குறள் எண் - 1091 இன்பத்துப்பால்: களவியல், அதிகாரம் 110 குறிப்பறிதல் உண்கண் - மையுண்ட கண் (மை தீட்டிய விழிகள்) நோக்கு - பார்வை இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து பொழிப்பு (மு வரதராசன்): இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும். அவளது பார்வை மதிமயக்கும் அழகு கொண்ட மங்கை இவளின் மையேந்திய விழிகளில் இருவகை பார்வைகள் உள்ளது ஒன்று காதல் நோய் கொடுக்கிறது ஒன்று அதற்கு மருந்தாய் இருக்கிறது இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு இந்த திருக்குறளின் விளக்க கட்டுரையை படிக்க   நோயும் அவளே! மருந்தும் அவளே! வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!

காதல் தீ..!

படம்
புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 01 குறள் எண் - 1104 இன்பத்துப்பால்: களவியல், அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல் நீங்கின் - நீங்கும் போது; தெறு - சுடு (தெறும் - சுடும்); குறுகுங்கால் - குறுகும்போது, அருகில் வரும்போது; தண் - குளிர்ச்சி; யாண்டு - எங்கு நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டு பெற்றாள் இவள் பொழிப்பு (மு வரதராசன்): நீங்கினால் சுடுகின்றது; அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது; இத்தகைய புதுமையான தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்? காதல் தீ எவ்வகை தீ இது என்னவளே உன்னிடம் இருப்பது? தூரம் நிற்கையில் சுடுகிறது தொடும் அருகினில் நெருங்கையில் குளிர்கிறது எங்கிருந்து பெற்றாய் என்கண்ணே இந்த காதல் தீயை? இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு இந்த திருக்குறளின் விளக்க கட்டுரையை படிக்க   காதல் தீ..! வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!