காதல் தீ..!
புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 01
குறள் எண் - 1104
இன்பத்துப்பால்: களவியல், அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்
நீங்கின் - நீங்கும் போது; தெறு - சுடு (தெறும் - சுடும்); குறுகுங்கால் - குறுகும்போது, அருகில் வரும்போது; தண் - குளிர்ச்சி; யாண்டு - எங்கு
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டு பெற்றாள் இவள்
பொழிப்பு (மு வரதராசன்): நீங்கினால் சுடுகின்றது; அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது; இத்தகைய புதுமையான தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்?
காதல் தீ
எவ்வகை தீ இது
என்னவளே உன்னிடம் இருப்பது?
தூரம் நிற்கையில் சுடுகிறது
தொடும் அருகினில் நெருங்கையில் குளிர்கிறது
எங்கிருந்து பெற்றாய்
என்கண்ணே இந்த காதல் தீயை?
இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு
இந்த திருக்குறளின் விளக்க கட்டுரையை படிக்க காதல் தீ..!
வாழ்க தமிழ்..!
வெல்க தமிழ்..!
கருத்துகள்
கருத்துரையிடுக