அவளது பார்வை

புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 02


குறள் எண் - 1091


இன்பத்துப்பால்: களவியல், அதிகாரம் 110 குறிப்பறிதல்

உண்கண் - மையுண்ட கண் (மை தீட்டிய விழிகள்)

நோக்கு - பார்வை


இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து


பொழிப்பு (மு வரதராசன்): இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும்.


அவளது பார்வை


மதிமயக்கும் அழகு கொண்ட

மங்கை இவளின் மையேந்திய விழிகளில்

இருவகை பார்வைகள் உள்ளது

ஒன்று காதல் நோய் கொடுக்கிறது

ஒன்று அதற்கு மருந்தாய் இருக்கிறது



இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு

இந்த திருக்குறளின் விளக்க கட்டுரையை படிக்க நோயும் அவளே! மருந்தும் அவளே!


வாழ்க தமிழ்..!

வெல்க தமிழ்..!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகான மனிதர்கள்

காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும்..!

அவள் முழுமையான அழகி..! டாட்.