காதல் போதை

 புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 04


குறள் எண் - 1281


இன்பத்துப்பால்: கற்பியல், அதிகாரம் 129, புணர்ச்சிவிதும்பல்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு


பொழிப்பு (மு வரதராசன்): நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகைத் தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு.


காதல் போதை


நங்கை நின்னை 

நினைக்கையில் கிடைக்கும்

களிப்பும்

நின் திருமுகம் கண்ட 

நொடியில் நான் கொள்ளும்

மகிழ்ச்சியும்

நம் காதலைத் தவிர

எந்த போதையும் தராதவை..!





இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு


வாழ்க தமிழ்..!

வெல்க தமிழ்..!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகான மனிதர்கள்

காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும்..!

அவள் முழுமையான அழகி..! டாட்.