உயிர் தரும் கனவு

 புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 03


குறள் எண் - 1213


இன்பத்துப்பால்: கற்பியல், அதிகாரம் 122, கனவுநிலை உரைத்தல்


நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்.


பொழிப்பு (மு வரதராசன்): நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால் தான், என் உயிரும் இன்னமும் போகாமல் இருக்கின்றது.


உயிர் தரும் கனவு


காணாத்தூரம் எனைவிட்டு

கண்ணே நீ சென்றபோதும்

தொலைந்த இரவுகளில் சிலநாள்

தூக்கத்தில் வருமென்

கனவினில் மிகஅருகினில்

காதலி நீ வாழ்கிறாய்

அதனால் நானும் இங்கே

அன்பே உயிரோடு இருக்கிறேன்..!





இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு


வாழ்க தமிழ்..!

வெல்க தமிழ்..!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகான மனிதர்கள்

காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும்..!

அவள் முழுமையான அழகி..! டாட்.