மறந்துவிடு மனமே

புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 05

குறள் எண் - 1242

இன்பத்துப்பால்: கற்பியல், அதிகாரம் 125, நெஞ்சொடு கிளத்தல்

இலர் - இல்லாதார்; நோவது - வருந்துவது; பேதைமை - அறியாமை; வாழி - வாழ்வாயாக

காதல் அவரிலர் ஆகநீ நோவது

பேதைமை வாழிஎன் நெஞ்சு


பொழிப்பு (மு வரதராசன்): என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவதும் உன் அறியாமையே.


மறந்துவிடு மனமே


காதல் அவளிடம்

கடுகளவும் இல்லை - உன்னை

அகன்ற அவளை எண்ணி

அணுவளவும் நோகாதே

அறிவுகொள் நீ மனமே!

அவள் வரப்போவதில்லை

மறப்பாயாக நீ மனமே!

முழுதாய் உன்னில் நிறைந்தவளை…



இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு


வாழ்க தமிழ்..!

வெல்க தமிழ்..!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகான மனிதர்கள்

காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும்..!

அவள் முழுமையான அழகி..! டாட்.