இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலியின் சண்டை

படம்
புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 05 குறள் எண் - 1314 யாரினும் - யாவரினும்; காதலம் - காதலை உடையவராய் இருக்கின்றோம்; ஊடினாள் - ஊடல் கொண்டாள் இன்பத்துப்பால்: கற்பியல், அதிகாரம் 132, புலவி நுணுக்கம் யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்றுஎன்று பொழிப்பு (மு வரதராசன்): யாரையும்விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக, யாரைவிட? யாரைவிட? என்று கேட்டு ஊடல் கொண்டாள். காத(லியின்)ல் சண்டை என் காதலியின் சண்டைகள் ஏகத்துக்கும் வித்தியாசமானவைகள் என்னவென்று சொல்ல? - ஒரு நாள் எல்லாரையும் விட நாம் இருவரும் எத்தனை அதிகமாய் காதலிக்கிறோம் என்றேன், யார் யாரையெல்லாம் விட என்று கேட்டு சண்டையிட்டாள் என்னைத் தவிரவும் நேசித்திருக்கிறாயோ? என்ற அர்த்தத்தில்... இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!

அவள் முழுமையான அழகி..! டாட்.

படம்
 டாட் - முழுமை இது உண்மையா இல்லை புரளியானு தெரியல. ஆனாலும் கூட எங்கேயோ கேள்விப்பட்ட இந்த விஷயம் எனக்கு கிட்டத்தட்ட உண்மையாத்தான் தெரிஞ்சது. அந்த உண்மையான புரளிய இப்போ உங்களுக்கு சொல்றேன். அது என்னன்னா முகத்துல இடது கன்னத்துக்கு கீழே எந்த பொண்ணுக்கெல்லாம் டாட் இருக்குதோ அவங்க எல்லாம் ரொம்ப அழகா இருப்பாங்க..! இந்த புரளிய இதுக்கு முன்னாடி நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? வேணா யோசிச்சு பாருங்க அந்த மாதிரி இடது கன்னத்துக்கு கீழே டாட் இருந்த எல்லாருமே அழகாத்தான் இருந்திருப்பாங்க. அப்படித்தான?  இந்த உண்மையான புரளியோட விளக்கமா எனக்கு ஞாபகம் இருக்கிறத சொல்றேன். கேட்டுக்கோங்க… ஒரு தொடர் எழுதினீங்கன்னா அந்த தொடரோட முடிவில ஒரு புள்ளி வைப்பீங்க இல்லையா? அந்த தொடர் முடிஞ்சிட்டு; முழுமையடைஞ்சிட்டுங்கிறத குறிக்கிறதுக்காக இந்த புள்ளி வைக்கிறோம். அதே மாதிரி இறைவன் படைக்கும்போது அந்த பெண்ணை தன்னோட முழுமையான கற்பனைய பயன்படுத்தி இதுக்கு மேல இந்த பெண்ணுக்கு அழகு சேர்க்கவே முடியாதுங்கிறத குறிக்கிற விதமா அந்த பெண்ணோட இடது கன்னத்துக்கு கீழே டாட் வச்சாராம். அதனால தான் அந்த மாதிரி டாட் இருக்கிறவங்கள்லாம்...