காதலியின் சண்டை

புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 05

குறள் எண் - 1314


யாரினும் - யாவரினும்; காதலம் - காதலை உடையவராய் இருக்கின்றோம்; ஊடினாள் - ஊடல் கொண்டாள்


இன்பத்துப்பால்: கற்பியல், அதிகாரம் 132, புலவி நுணுக்கம்


யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்றுஎன்று


பொழிப்பு (மு வரதராசன்): யாரையும்விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக, யாரைவிட? யாரைவிட? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.


காத(லியின்)ல் சண்டை


என் காதலியின் சண்டைகள்

ஏகத்துக்கும் வித்தியாசமானவைகள்

என்னவென்று சொல்ல? - ஒரு நாள்

எல்லாரையும் விட நாம் இருவரும்

எத்தனை அதிகமாய் காதலிக்கிறோம்

என்றேன், யார் யாரையெல்லாம் விட

என்று கேட்டு சண்டையிட்டாள்

என்னைத் தவிரவும் நேசித்திருக்கிறாயோ?

என்ற அர்த்தத்தில்...




இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு


வாழ்க தமிழ்..!

வெல்க தமிழ்..!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகான மனிதர்கள்

காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும்..!

அவள் முழுமையான அழகி..! டாட்.