அவள் முழுமையான அழகி..! டாட்.
டாட் - முழுமை
இது உண்மையா இல்லை புரளியானு தெரியல. ஆனாலும் கூட எங்கேயோ கேள்விப்பட்ட இந்த விஷயம் எனக்கு கிட்டத்தட்ட உண்மையாத்தான் தெரிஞ்சது. அந்த உண்மையான புரளிய இப்போ உங்களுக்கு சொல்றேன். அது என்னன்னா முகத்துல இடது கன்னத்துக்கு கீழே எந்த பொண்ணுக்கெல்லாம் டாட் இருக்குதோ அவங்க எல்லாம் ரொம்ப அழகா இருப்பாங்க..! இந்த புரளிய இதுக்கு முன்னாடி நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? வேணா யோசிச்சு பாருங்க அந்த மாதிரி இடது கன்னத்துக்கு கீழே டாட் இருந்த எல்லாருமே அழகாத்தான் இருந்திருப்பாங்க. அப்படித்தான?
இந்த உண்மையான புரளியோட விளக்கமா எனக்கு ஞாபகம் இருக்கிறத சொல்றேன். கேட்டுக்கோங்க… ஒரு தொடர் எழுதினீங்கன்னா அந்த தொடரோட முடிவில ஒரு புள்ளி வைப்பீங்க இல்லையா? அந்த தொடர் முடிஞ்சிட்டு; முழுமையடைஞ்சிட்டுங்கிறத குறிக்கிறதுக்காக இந்த புள்ளி வைக்கிறோம். அதே மாதிரி இறைவன் படைக்கும்போது அந்த பெண்ணை தன்னோட முழுமையான கற்பனைய பயன்படுத்தி இதுக்கு மேல இந்த பெண்ணுக்கு அழகு சேர்க்கவே முடியாதுங்கிறத குறிக்கிற விதமா அந்த பெண்ணோட இடது கன்னத்துக்கு கீழே டாட் வச்சாராம். அதனால தான் அந்த மாதிரி டாட் இருக்கிறவங்கள்லாம் இறைவனோட முழுமையான கற்பனையோட நாம பார்த்ததிலேயே அழகானவங்களா இருக்காங்களாம். இது தான் அந்த உண்மையான புரளியோட விளக்கம்.
இன்னொரு விஷயத்தை நீங்க கவனிச்சிருக்கலாம். அது என்னப்பா இடது கன்னம்… இடது கன்னம்னு… இடது பக்கத்தை ரொம்ப அழுத்தமா சொல்றீயேன்னு… என்கிட்ட இந்த புரளிக்கதை வரும்போது பொதுவா முகத்துல டாட் இருந்தாலே அழகா இருப்பாங்கன்னுதான் வந்தது. ஆனால் வலது பக்கத்துல டாட் இருக்கிற பொண்ணுங்களை பாக்கும் போது அவ்வளவா இது ஒத்துப்போகல. புரளினுதான் தோணிச்சு. அதே நேரத்துல இடது பக்கத்துல டாட் இருக்கிறவங்களுக்கு இந்த விளக்கம் சரியா இருந்தது. அப்போ தான் இந்த புரளி எனக்கு உண்மையான புரளியா மாறிச்சு.
அது ஏன்னு யோசிச்சு பார்த்தப்போ இந்த பதில் கிடைச்சது. ஒருவேளை இந்த மாதிரி அழகான பெண்களை எல்லாம் படைக்கிற இறைவன் என்னை மாதிரி ஒரு வலதுகைப்பழக்கம் உள்ள இடமிருந்து வலம் எழுதுற ஒருத்தரா இருப்பார் போல. அப்போ தான் வலது பக்கம் டாட் வைப்பாங்க. நமக்கு வலது பக்கங்கிறது அந்த அழகான பெண்கள் முகத்துல இடது பக்கம் இல்லையா? எப்படி என் கண்டுபிடிப்பு..?
ஏன்ப்பா டாட் இருக்கிற பெண்கள் மட்டும் தான் அழகா? ஆண்கள்லாம் அழகு இல்லையானு? யாராவது கேட்கிறீங்களா.. எனக்கு தெரிஞ்சு முகத்துல டாட் இருக்கிற எந்த ஆணையும் இதுவரை நான் பார்த்ததில்லங்க. ஒருவேளை தாடிக்குள்ள மறைஞ்சிருந்திருக்கலாம். நீங்க பார்த்திருக்கீங்கன்னா இந்த புரளி அங்க உண்மையாகுதா இல்லையானு சொல்லுங்க.
அவ்ளோதாங்க இந்த புரளி கதை முடிஞ்சது.முழுசா வாசிச்சு முடிச்சிட்டு நாட்டுக்கு இது ரொம்ப அவசியம்டான்னு கோபப்படாதீங்க. சும்மா ஒரு ரிலாக்சேசனுக்கான (Relaxation) கதைதான் இது. உங்களுக்கு இந்த தியரி (Theroy) ஒர்க் (Work) ஆகுதா இல்லையானு சொல்லுங்க.
மிக்கநன்றி.
எனக்கு இருக்கே அந்த டாட்
பதிலளிநீக்கு