இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும்..!

படம்
  காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும்..! காதல் தோல்வியான பலர் தாடி வளர்த்துட்டு இருக்கிறத பார்த்திருப்பீங்க. அதனாலயே யாராவது நிறைய தாடியோட இருந்தாங்கன்னா அவங்க கிட்ட “என்னப்பா காதல் தோல்வியா? தேவதாஸ் மாதிரி தாடி வச்சிட்டு இருக்க? ஷேவ் பண்ணலயா?”ன்னு பலர் கேட்குறத பார்த்திருப்பீங்க.நீங்களும் கூட கேட்டிருக்கலாம்..! ஏன் காதல் தோல்வினாலே தாடி வளர்க்குறாங்க..? அதுக்கு காரணம் என்னன்னு தெரியுமா..? தேவதாஸ் காதலிச்ச பொண்ணு கிடைக்கலன்னு தாடி வச்சிட்டு தண்ணி அடிச்சிட்டு திரிஞ்சாரு. அதையே எல்லாரும் பின்பற்றுறாங்கன்னு சொல்றீங்களா? சரி தேவதாஸ் ஏன் காதல் தோல்வியை தாடி வளர்த்து கொண்டாடுனாரு? (கட்டுரை முழுக்க ஒரே கேள்விக்குறியா இருந்த மாதிரி இருக்கு… இனிமே முடிஞ்ச வரை பதிலா சொல்ல பார்க்குறேன்…) சமீபத்தில இப்படி ஒரு வாசகத்தை படிச்சேன், “ஒரு ஆண் எப்போ தன்னை நேசிக்க ஆரம்பிக்கிறான்னா, ஒரு பெண் தன்னை நேசிக்கிறாங்கிறது தெரிஞ்சதுக்கப்புறம் தான்’. (இந்த கட்டுரையை ஆரம்பிச்சப்போ என்ன சொல்லறதுக்காக எழுதினேன்னு இப்ப மறந்து போச்சு. கொஞ்சம்தான் ஞாபகம் இருக்கு. ஏன்னா சுமார் 5 மாசத்துக்கு முன்னாடி மேல இருக்கிற வரைக்க...