காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும்..!
காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும்..!
காதல் தோல்வியான பலர் தாடி வளர்த்துட்டு இருக்கிறத பார்த்திருப்பீங்க. அதனாலயே யாராவது நிறைய தாடியோட இருந்தாங்கன்னா அவங்க கிட்ட “என்னப்பா காதல் தோல்வியா? தேவதாஸ் மாதிரி தாடி வச்சிட்டு இருக்க? ஷேவ் பண்ணலயா?”ன்னு பலர் கேட்குறத பார்த்திருப்பீங்க.நீங்களும் கூட கேட்டிருக்கலாம்..!
ஏன் காதல் தோல்வினாலே தாடி வளர்க்குறாங்க..? அதுக்கு காரணம் என்னன்னு தெரியுமா..? தேவதாஸ் காதலிச்ச பொண்ணு கிடைக்கலன்னு தாடி வச்சிட்டு தண்ணி அடிச்சிட்டு திரிஞ்சாரு. அதையே எல்லாரும் பின்பற்றுறாங்கன்னு சொல்றீங்களா? சரி தேவதாஸ் ஏன் காதல் தோல்வியை தாடி வளர்த்து கொண்டாடுனாரு? (கட்டுரை முழுக்க ஒரே கேள்விக்குறியா இருந்த மாதிரி இருக்கு… இனிமே முடிஞ்ச வரை பதிலா சொல்ல பார்க்குறேன்…)
சமீபத்தில இப்படி ஒரு வாசகத்தை படிச்சேன், “ஒரு ஆண் எப்போ தன்னை நேசிக்க ஆரம்பிக்கிறான்னா, ஒரு பெண் தன்னை நேசிக்கிறாங்கிறது தெரிஞ்சதுக்கப்புறம் தான்’.
(இந்த கட்டுரையை ஆரம்பிச்சப்போ என்ன சொல்லறதுக்காக எழுதினேன்னு இப்ப மறந்து போச்சு. கொஞ்சம்தான் ஞாபகம் இருக்கு. ஏன்னா சுமார் 5 மாசத்துக்கு முன்னாடி மேல இருக்கிற வரைக்கும் எழுதிருக்கேன் இப்போ 5 மாசம் கழிச்சு திறந்து பார்க்குறேன். திரும்ப எழுத முயற்சி பண்றேன். அதுனால ஆரம்பிச்ச நோக்கத்துல இந்த கட்டுரை முடியுமானு தெரியல. ஓரளவுக்கு அத ஒட்டி கட்டுரையை முடிச்சிருவேன்னு நினைக்கிறேன். 5 மாசம் கழிச்சு எதுக்குப்பா இத எழுதணும்னு நினைக்கிற அப்படியே விட்டுற வேண்டியது தானேன்னு நீங்க கேட்கலாம்! ஆனா இப்போ எனக்கு எதாவது எழுதணும் போல இருக்கு அதனாலதான்.)
சரி கட்டுரைக்கு வருவோம். மேல சொன்ன கேள்விகள் எல்லாம் எனக்கு ரொம்ப நாளா இருந்துச்சு! ஆனா அது எல்லாத்துக்கும் பதில் சொல்ற மாதிரி இந்த வாசகம் இருந்துச்சு. அதான் அத உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு இந்த கட்டுரை. அந்த வாசகத்தை படிக்கும்போது எனக்கு இதுக்கு ரெண்டுவிதமான பதில் கிடைச்சது அல்லது ரெண்டு ரகமான ஆண்கள் பத்தி கிடைச்சதுன்னு சொல்லலாம்.. முதல் ரகம் என்னன்னா, பெரும்பாலும் ஆண்கள் தங்களை அலங்கரிச்சுக்கிறது பெண்களுக்காக தான். அவங்களுக்கு பிடிச்ச பெண்ணுக்கு, அவங்களை பிடிக்க வைக்கிறதுக்கு நல்லா அழகா முடிவெட்டி, கிளீன் ஷேவ் பண்ணி, இல்லனா அழகா தாடியை டிரிம் பண்ணி, பவுடர் போட்டு, நெற்றியில குங்குமம், சந்தனம்லாம் வச்சு... அப்படி போய் நிப்பாங்க.
ஆனா அவங்களுக்கு பிடிச்ச பொண்ணுக்கு அவங்கள பிடிக்காம போயிட்டு இல்லனா அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்றதுக்கான வாய்ப்பு கிடைக்காம போயிட்டுங்கிற நிலைமை வரும்போது அதான் காதல் தோல்வியானதுக்கு அப்புறம், அவங்க சரியா முடிவெட்டுறது, தாடியை பராமரிக்கிறது, பவுடர் போடுறதுன்னு எதுவே செய்யிறது இல்ல. அதுக்கான அவசியம் இருக்கிறதா அவங்க நினைக்கிறது இல்ல. அதனாலதான் தேவதாஸ் மாதிரி தாடி, தலைமுடிலாம் நீளமா வளர்த்துட்டு சுத்துறாங்க.
இரண்டாவது ஒரு ரகமான ஆண்கள் எப்படின்னா, அவங்க எப்பவுமே தங்கள பத்தி கவலைப்படமாட்டாங்க. தங்கள அலங்கரிச்சுக்க, அழகா காட்ட அவங்களுக்கு தெரியாது. அவங்க வாழ்க்கையில ஒரு காதல் வந்ததுக்கு அப்புறம் அவங்கதான் இவங்கள எப்பவுமே இப்படி முடிவெட்டு, ஏன் இவ்ளோ தாடி வளர்த்துட்டு சுத்துறனு அவங்கள கண்டிச்சு அவங்கள பத்தி கவனம் எடுத்துட்டு எல்லாமே சொல்வாங்க. அந்த காதல் தோல்வில முடியும்போது அவங்கள பார்த்துக்கிட்ட அந்த ஆள் இல்லாம அவங்க முன்ன மாதிரி இல்ல அதவிட மோசமா மாறிடுறாங்க போல. மொத்தத்துல ஒரு பையன் அழகா இருக்கிறதுக்கும் தேவதாஸ் மாதிரி ஆகுறதுக்கும் ஒரு பொண்ணு தான் காரணம். (அப்படின்னு அந்த வாசகத்தை படிச்சதுக்கு அப்புறம் சில விஷயங்கள யோசிச்சதுக்கு அப்புறம் எனக்கு தோணிச்சு. உங்களுக்கு என்ன தோணுதுன்னு நீங்க தாராளமா சொல்லலாம்..!)
காதல் தோல்வியால ஆண்கள் மட்டும்தான் வாடுவாங்களா? பெண்கள் அதனால கவலைப்படுறது இல்லையானு நீங்க கேட்கலாம். பெண்களால தேவதாஸ் மாதிரி தாடி வளர்க்க முடியாதுங்கிறதால அவங்கள பத்தி இந்த கட்டுரையில சொல்ல வேண்டிய அவசியம் வரல. (சும்மா காமெடி) காதல் பிரிவால ஆண்கள் மட்டுமில்லை, பெண்களுக்கும் வெளித்தோற்றத்துல நிறைய மாற்றம் தெரியும். காதலன பிரியுற பெண்களுக்கு பசலை நோய்னு ஒரு நோயே வர்றதா திருக்குறள் உட்பட நிறைய தமிழ் இலக்கியங்கள் சொல்லுது. அதாவது பசலை நோய் வந்த பெண் உடல் வெளுத்து, மெலிந்து, கண்ணுல ஏக்கத்தோட, ரொம்ப சோர்வா இருப்பாங்களாம்.
ஆக காதல் தோல்வி, பிரிவுங்கிறது எல்லாரையுமே வாட வைக்கிற, மனசு நோகவைக்கிற ஒண்ணுதான். தேவதாஸ் ஏன் காதல் தோல்வியில தாடி வளர்த்தாருங்கிற கேள்விக்கு இப்ப பதில் கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன். இதெல்லாம் எங்களுக்கே தெரியும்டா! இதுக்கு ஏன் இவ்வளவு பெரிய கட்டுரைனு நீங்க கேட்கலாம். அதுக்கும் பதில நான் இந்த கட்டுரையிலேயே சொல்லிட்டேன். மீண்டும் சந்திப்போம்...
சமீபத்தில இப்படி ஒரு வாசகத்தை படிச்சேன், “ஒரு ஆண் எப்போ தன்னை நேசிக்க ஆரம்பிக்கிறான்னா, ஒரு பெண் தன்னை நேசிக்கிறாங்கிறது தெரிஞ்சதுக்கப்புறம் தான்’.
பதிலளிநீக்குஅருமையான வரிகள் 👌
முதல் ரகம் , இரண்டாம் ரகம் வகைப்படுத்தி காட்டியது நன்றாகத் தெளிவாகப் புரிந்தது .
நன்றி தோழரே😊👍
பசலை காதல் தோல்வியால் வராது. பிரிவால் தான் வரும்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்கு🔥
பதிலளிநீக்குWell explained na💥
பதிலளிநீக்கு