இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவளது பார்வை

படம்
புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 02 குறள் எண் - 1091 இன்பத்துப்பால்: களவியல், அதிகாரம் 110 குறிப்பறிதல் உண்கண் - மையுண்ட கண் (மை தீட்டிய விழிகள்) நோக்கு - பார்வை இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து பொழிப்பு (மு வரதராசன்): இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும். அவளது பார்வை மதிமயக்கும் அழகு கொண்ட மங்கை இவளின் மையேந்திய விழிகளில் இருவகை பார்வைகள் உள்ளது ஒன்று காதல் நோய் கொடுக்கிறது ஒன்று அதற்கு மருந்தாய் இருக்கிறது இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு இந்த திருக்குறளின் விளக்க கட்டுரையை படிக்க   நோயும் அவளே! மருந்தும் அவளே! வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!

நோயும் அவளே! மருந்தும் அவளே!

படம்
நம்ம எல்லாராலயும் 2020-வது ஆண்டை மறக்கவே முடியாது. இன்னும் எத்தனை ஆண்டுக்கு அப்புறம் கேட்டாலும் கூட கொரோனா, ஊரடங்கு, கொத்து கொத்தா மரணம், பயம், வேலை பறிபோனது, வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்ததுன்னு 2020-ம் ஆண்டை பற்றி பக்கம் பக்கமா சொல்லுவோம். ‘என்ன தம்பி! அதவேற ஞாபகப்படுத்திட்டீங்க நெஞ்செல்லாம் புண்ணாருக்குனு’ சொல்றீங்களா? கேட்குது.. கேட்குது… கொரோனா மட்டுமில்ல இந்த உலகம் அம்மைநோய், காலரா, பிளேக் அது இதுன்னு ஏகப்பட்ட நோயை அனுபவிச்சிருக்கு. இப்படி புதுசு புதுசா நோய் பரவும்போது அந்த நோயை கட்டுக்குள்ள கொண்டுவரவும் தொடர்ந்து பரவாம இருக்கவும் நடவடிக்கை எடுத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா அதுக்கு மருந்து கண்டுபிடிப்பாங்க. அப்படித்தான் கொரனாவுக்கும் முடிஞ்ச அளவு வேகமாக தடுப்பூசி கண்டுபிடிச்சு கட்டுக்குள்ள கொண்டுவந்தாங்க. அப்புறம் அது புதுசு புதுசா, தினுசு தினுசா உருமாறி 2-வது அலை, 3-வது அலைன்னு வந்துட்டு இருந்துச்சு. இன்னும் வந்துட்டு இருக்கு. சரி அத விடுங்க! நம்ம திருக்குறளுக்குள்ள வருவோம். திருவள்ளுவர் இந்த குறள்ல ஆதி மனிதன் என்னைக்கு தோன்றினானோ அன்னைக்கு தோன்றின ஒரு நோயை ப...

எனக்கு பிடிக்குமா? பிடிக்காதா?

படம்
திருக்குறள் எனக்கு பிடிக்குமா..? இல்லையா..? ஒரு கவிதையோ, கட்டுரையோ எதுவா இருந்தாலும் நமக்கு பிடிக்குதா இல்லையாங்கிற அது நமக்கு புரிஞ்சாதான் முடிவு பண்ண முடியும். திருக்குறள் நமக்கு பிடிக்காதுன்னு சொல்றத விட நமக்கு அது புரியாத காரணத்தால நாம அந்த முடிவ எடுக்குற இடத்துக்கே போகலங்கிறது தான் உண்மை.  திருக்குறள் ஏன் புரியல..? எனக்கு தெரிஞ்சு தமிழ் இலக்கியங்கள்ல ரொம்பவும் எளிமையான ஒரு இலக்கியம் திருக்குறள் தான். எவ்வளவுக்கு எவ்வளவு குறைஞ்ச சொற்களை பயன்படுத்தி ஒரு திருக்குறள எழுத முடியுமோ அப்படி குறைஞ்ச சொற்களை மட்டும் பயன்படுத்தி வள்ளுவர் திருக்குறளை எழுதிருக்காரு. இருந்தும் ஏன் திருக்குறள் புரிய மாட்டேங்குது அப்படினு கேட்குறீங்களா? எந்த ஒரு இலக்கியமா இருந்தாலும் அதுக்கு நயங்கள் முக்கியம். அதாங்க முதல் எழுத்து ஒன்னுபோல வர்றது (மோனை), இரண்டாவது எழுத்து ஒன்னு போல வர்றது (எதுகை), கடைசி எழுத்து ஒன்னு போல வர்றது (இயைபு) அதுமாதிரி எழுதுறது. இப்படி சில நயங்களுக்காக சில சொற்களை இடமாற்றி வள்ளுவர், திருக்குறளை எழுதிருக்காரு. அதனால தான் திருக்குறள் எளிமையா இருந்தாலும் அத வாசிக்கும்போது நமக்கு புரிய ...

காதல் தீ..!

படம்
புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 01 குறள் எண் - 1104 இன்பத்துப்பால்: களவியல், அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல் நீங்கின் - நீங்கும் போது; தெறு - சுடு (தெறும் - சுடும்); குறுகுங்கால் - குறுகும்போது, அருகில் வரும்போது; தண் - குளிர்ச்சி; யாண்டு - எங்கு நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டு பெற்றாள் இவள் பொழிப்பு (மு வரதராசன்): நீங்கினால் சுடுகின்றது; அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது; இத்தகைய புதுமையான தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்? காதல் தீ எவ்வகை தீ இது என்னவளே உன்னிடம் இருப்பது? தூரம் நிற்கையில் சுடுகிறது தொடும் அருகினில் நெருங்கையில் குளிர்கிறது எங்கிருந்து பெற்றாய் என்கண்ணே இந்த காதல் தீயை? இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு இந்த திருக்குறளின் விளக்க கட்டுரையை படிக்க   காதல் தீ..! வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!

காதல் தீ..!

படம்
கவிதைகள் நமக்கு பிடிக்கணும்னா அதுல சொல்லப்பட்டிருக்கிற உவமைகளும் ஒப்பீடும் வித்தியாசமா இருக்கணும்; அதே நேரத்துல எளிமையா இருக்கணும். அப்படி இருக்கிற கவிதைகள் நிச்சயமா எல்லாரையும் கவரும். இந்த குறள பாருங்க. ‘நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டு பெற்றாள் இவள்’ சின்ன வயசுல தீயை பார்க்கும் போது நாம எல்லாரும் வேகமா அத தொட முயற்சி பண்ணிருப்போம். நம்ம அம்மா ‘வேணாம்மா தீ கிட்ட போகாதா சுட்டுரும்’ அப்படின்னு சொல்லிருப்பாங்க. சிலர் அதையும் கேட்காம இன்னும் கிட்ட போய் சூடு கூட வாங்கிருப்போம். இப்போ நம்ம எல்லாருக்கும் தெரியும். தீ கிட்ட போகப் போக அதோட வெம்மை அதிகமா இருக்கும். ரொம்ப கிட்ட போனா சுட்டுரும்னு. தள்ளி நிற்கும் போது அதோட வெம்மை நமக்கு தெரியாது. இதுதான் தீயோட பண்பு. ஆனா வள்ளுவர் இந்த குறள்ல காட்டுற தீ ரொம்பவே வித்தியாசமானது. அது காதலி கிட்ட இருக்கிற தீ. இந்த தீயோட தன்மை தள்ளிப்போகும் போது சுடுதாம். கிட்ட வரும்போது குளிருதான். வள்ளுவரே கூட ஆச்சரியப்படுறாரு. இந்த மாதிரி ஒரு தீயை இவ எங்க இருந்து பெற்றாள்னு ஒரு கேள்வியோட தான் இந்த குறள முடிக்கிறாரு. ரொம்பவே வித்தியாசமான ஒரு ஒப்பீடு...

இன்பத்துப்பால் - வள்ளுவன் காட்டும் காதலும் காதலர்களும்

படம்
  காதற்தலைவா வள்ளுவா..! தமிழ்ப் புலவர்கள் பலர் இருக்கிறாங்க. அவங்கள்ல நமக்கு யாரைத் தெரியுதோ இல்லையோ ஆனால் இவரைக் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். இந்த நூற்றாண்டைச் சேர்ந்த இளைஞர்கள் அறிவுரை சொல்லுற பெரியவங்களுக்கு ‘பூமர்’னு ஒரு பேர் வச்சிருக்காங்க. இவரையும் அப்படி ஒரு பூமராத்தான் பதின் பருவத்துல இருக்கிற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். தலைப்பை பார்க்கும் போதே நான் யாரை பத்தி சொல்ல வர்றேன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். திருக்குறள்-ங்கிற ஒப்பற்ற உலகப்புகழ்பெற்ற ‘தமிழ்மறை’ யை எழுதின வள்ளுவரைப் பற்றித்தான் சொல்ல வர்றேன். ஏறக்குறைய இரண்டாம் வகுப்புல இருந்து தமிழ்ப்புத்தகத்துல தவறாம இடம்பெறும் ஒரு செய்யுள்னா அது திருக்குறள் தான். திருக்குறளுக்கோ திருவள்ளுவருக்கோ நான் அறிமுகம் சொல்லணும்ங்கிற அவசியம் இல்லை. எல்லாருக்கும் ஏகத்துக்கும் இரண்டு பேரையும் பற்றி தெரிஞ்சிருக்கும். அப்புறம் வேற எதைப் பத்தி நீ சொல்லப் போறன்னு நீங்க கேட்கலாம். சொல்றேன். என்னைப் பொறுத்த வரைக்கும் பதின் பருவத்துல இருக்கிற எல்லாருக்கும் ரொம்பவும் பிடிச்ச ஒரு புலவரா இருந்திருக்க வேண்டிய ஒருத்தர் திருவள்ளுவர். ஆனால் பள்ளிக்...