அழகான மனிதர்கள்
அழகான மனிதர்கள் சில கருத்துகள் ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபட்டது. என்னோட பார்வையில சரின்னு தோணுறது உங்க பார்வையில தப்பா இருக்கலாம். நான் தப்புனு சொல்றது உங்களுக்கு சரின்னு தோணலாம். சில விசயங்கள நம்மாள நேரடியா இது இதுதான்னு சொல்லிட முடியாது. அது அதபத்தி யார் சொல்றாங்களோ அவங்களோட சூழ்நிலை, அனுபவம், வயசு, குடும்பம்னு எல்லாத்தையும் பொறுத்து மாறுபடும். உங்களவிட ஒருத்தர் சந்தோசமா இருக்கிறத பார்த்து நீங்க ஏங்கிட்டு இருக்கும்போது உங்கள பார்த்து ஒருத்தர் எவ்வளவு சந்தோசமா இருக்காங்கன்னு நினைக்கலாம். அழகுங்கிறதும் இத மாதிரி ஒருத்தருக்கு ஒருத்தர் மாறக்கூடியதுதான். நிறைய வகையில அழகும் வரையறுக்கப்படுகிறது. நான் இந்த கட்டுரையில அழகைப் பத்தி பேசப் போறது இல்ல. நான் சந்திச்ச சில அழகான மனிதர்கள பத்தி சொல்லப் போறேன். அவங்களோட வெளித்தோற்றம் இந்த அழகான மனிதர்கள்ங்கிற வார்த்தைக்கு ஒருவேளை பொருந்தலாம். இல்ல பொருந்தாம கூட இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி அவங்கள அழகுன்னு என்ன சொல்ல வச்சது அவங்களோட செயல்கள்தான். சம்பவம் நம்பர் ஒன்னு. கொஞ்ச மாசங்களுக்கு முன்னால டூர் போயிருந்தேன். டூர்னா ஷாப்பிங் இல்லாமலா? அப்ப...